ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆளும் அதிமுகவும் போராட வேண்டும்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆளும் அதிமுகவும் போராட வேண்டும்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்
Updated on
2 min read

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், விழுப்புரம் மாவட் டம் கோட்டக்குப்பத்தில் நேற்று முன்தினம் இரவு கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் பேசியது:

மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கு முன்பாகவே, தமிழகத்தில் மக்கள் விரோத நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி விட்டது. தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் படிமங்கள் எடுக்க, தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் - புதுச்சேரி இடையே 116 இடங்க ளிலும், கடலூர் - நாகை இடையே 152 இடங்களிலும் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அதாவது 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழத்தில் பூமியில் பள்ளம் தோண் டப்படும்.

இத்திட்டம் விழுப்புரம், புதுச் சேரி, நாகை பகுதிகளில் அமை கிறது. இப்பகுதிகள் மக்கள் அடர்த் தியாக வாழக்கூடிய பகுதிக ளாகும். தமிழகத்துக்கே உணவு வழங்கும் இப்பகுதியை சீரழிக்கும் நடவடிக்கைக்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், தமிழகத்தில் வரும் 10 ஆண்டு களில் இயற்கை வளங்களை சுரண்டும் நடவடிக்கைகள் தயாராக உள்ளன. பூமிக்கடியில் மிக ஆழமான பகுதியில் 25 விதமான ரசாயனப் பொருட் கள் தண்ணீருடன் கலந்து உள்செ லுத்தப்படும். அவ்வாறு அழுத்தம் கொடுத்தால்தான் ஹைட்ரோ கார்பன் படிமங்களை எடுக்க முடியும். இதனால் நிலநடுக்கம் கூட ஏற்படும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால், இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவும் போராட வேண்டும். அவர்களுடன் இணைந்து போராட நாங்களும் தயார். மனித உயிர்கள், குடிநீர் பற்றி கவலையே இல்லாமல், ஒரு தனியார் நிறுவனம் பயன்பெற மத்திய அரசு அதிக முனைப்பு காட்டுகிறது. மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் அடிமை ஆட்சியாக தமிழகம் இருக்கிறது. இத்திட்டத்தை எதிர்க்க, எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக முன்னாள் அமைச் சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் எம்.பி, மார்க் சிஸ்ட் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சகாபுதீன், இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராணுவத்துடன் வந்தாலும் அனுமதியில்லை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான இக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது. மத்திய அரசு ராணுவத்துடன் வந்தாலும் புதுச்சேரியில் இத்திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்க மாட்டோம். ஆட்சி வரும்; போகும். மக்கள் நலன்தான் முக்கியம். எங்கள் ஆட்சியே போனாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க விட மாட்டேன். தமிழக அரசுக்கு முதுகெலும்பு இல்லை. ஆட்சியை தக்க வைப்பதில்தான் அவர்கள் குறிக்கோளாக உள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து முதல்- அமைச்சர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து போராடவும் தயாராக உள்ளேன் என்று கூறினார்.

165 பேர் மீது வழக்கு

போலீஸாரின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோட்டக் குப்பத்தில் இக்கூட்டத்தை நடத்தியதாக இன்ஸ்பெக்டர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், இந்திய கம்யூனிஸ்ட் விழுப்புரம் மாவட்ட நிர்வாக க்குழு உறுப்பினர் சகாபுதீன், இஸ்மாயில் உட்பட 165 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in