Published : 12 Jun 2019 08:41 AM
Last Updated : 12 Jun 2019 08:41 AM

வங்கி சேமிப்புக் கணக்கின் பரிவர்த்தனை அறிக்கைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. தொடக்கத்தில் ஜிஎஸ்டி வரி அதிகமாக இருந்த தால், பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, பல பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி படிப்படியாக குறைக்கப்பட்டது.

எனினும், இன்னும் சில பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டு வருகிறது. சேவைகளுக்கான வரி, அதிலும் குறிப்பாக, வங்கியில் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான வரி குறைக் கப்படவில்லை. இதனால், வாடிக் கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து வங்கி வாடிக்கை யாளர்கள் கூறியதாவது: வங்கி களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் சேவைக் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், வங்கி சேமிப் புக் கணக்கு ஸ்டேட்மென்ட் பெறுவதற்கான சேவைக் கட்டணத்துக்கு அதிகபட்சமாக 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுகிறது. ஒரு பக்கம் கொண்ட ஸ்டேட்மென்ட்டுக்கு சேவைக் கட்டணம் ரூ.100 அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியாக ரூ.18 என மொத்தம் ரூ.118 வசூலிக்கப்படுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் என்றால், முதல் பக்கத்துக்கு ரூ.100, அதற்கு மேல் தலா ரூ.25 கட்டணம், அந்த மொத்தக் கட்டணத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு பக்க ஸ்டேட்மென்ட்டுக்கு ரூ.100 கட்ட ணம் வசூலிப்பதே அதிகம். அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது அதைவிட கொடுமை.

எனவே, சேமிப்புக் கணக்கு ஸ்டேட்மென்ட் பெறுவதற்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். அல்லது, குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x