

ஆத்தூர் அருகே ஆதிதிராவிட பள்ளி மாணவர் விடுதியில் மாண வரின் பணம் காணாமல் போனதால், சக மாணவர்களின் உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றிவைத்து சோதனை செய்த கொடூர சம்பவம் நடந் துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் மும்முடி கிராமத்தில் ஆதி திராவிடர் பள்ளி மாணவர் விடுதி இயங்கி வருகிறது. சேலம், பெரம்பலூர் மற்றும் விழுப் புரம் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளர் மற்றும் சமையல்காரர் ஆகியோர் பணியிட மாற்றம் செய் யப்பட்டு, பல மாதங்களாகியும் புதிய காப்பாளர் நியமிக்கப்பட வில்லை.
இந்நிலையில் இந்த விடுதியில் தங்கியிருக்கும் 7-ம் வகுப்பு மாணவர் ஜெயபிரகாஷ் வைத் திருந்த ரூ.110 காணாமல் போனது. இதனால், ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயசூர்யா ஆகியோர் விடுதியில் தங்கி இருக்கும் சக மாணவர்களைச் சந்தேகப்பட்டனர்.
தனது பணத்தை திருடியவர் களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சக மாணவர்களின் உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றி வைத்து அந்த கற்பூரம் கீழே விழுந் தால் அவர்கள்தான் பணத்தை திருடி யவர்கள் என்று கூறி பத்துக்கும் மேற்பட்டவர்களின் உள்ளங்கை யில் கற்பூரம் ஏற்றி சோதனை செய்தனர். இதனால், மாணவர்கள் பலருக்கு கையில் காயம் ஏற்பட்டது. ஆனால் இதுகுறித்து புகார் அளிக்க காப்பாளர் மற்றும் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மாணவர்கள் காயத்தோடு இருந்தனர். நேற்று முன் தினம், மாணவர்களின் பெற்றோர் விடுதிக்கு வந்துள்ளனர்.
மாணவர்கள் கையில் கற்பூரம் ஏற்றியதுகுறித்து, பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட மாண வர்கள் கூறியுள்ளனர். இதனை யடுத்து, பெற்றோர் கொடுத்த புகா ரின்பேரில் ஆத்தூர் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை யினர் சம்பந்தப்பட்ட விடுதிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மாண வர்களிடம் விசாரணை செய்தனர். விடுதியில் காப்பாளர் மற்றும் அலு வலர்கள் யாரும் இல்லாததே இது போன்ற செயலுக்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். 110 ரூபாய் பணம் காணா மல் போனதால், மாணவர்களின் கைகளில் கற்பூரம் ஏற்றிய கொடுமை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.