

தமிழகம் முழுவதும் உதவி ஆணையர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றும் அதிகாரிகள் ஏடிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1987-ம் ஆண்டு காவல் பணியில் இணைந்த கேட்டகிரி 1 எனப்படும் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகள் தற்போது அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம் டிஎஸ்பிக்களாகவும், உதவி ஆணையர்களாகவும் பல்வேறு இடங்களில் காவல் பணியில் உள்ளனர்.
இவர்களுக்கான பதவி உயர்வு குறித்து டிஜிபி சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரை அடிப்படையில் தற்போது கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள் அல்லது கூடுதல் துணை ஆணையர் என்கிற பதவிக்கு உயர்த்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் 41 அதிகாரிகள் இத்தகைய பதவி உயர்வைப் பெற்றுள்ளனர்.
இதில் சமீபத்தில் மாமல்லபுரத்தில் பார் உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டதால் இடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பி சுப்புராஜும் வருகிறார்.
பொதுவாக டிஎஸ்பி அல்லது உதவி ஆணையர்கள் மூன்று நட்சத்திரம் மற்றும் கருப்புப் பட்டையுடன் சீருடை அணிவார்கள். தற்போது கிடைக்கும் பதவி உயர்வு மூலம் மூன்று நட்சத்திரங்களுக்குப் பதிலாக அசோக சின்னத்தை தோள் பட்டையில் அணிவார்கள். இவர்கள் ஏடிஎஸ்பி அல்லது ஏடிசி என அழைக்கப்படுவார்கள்.
பணி ஓய்வுபெறும் காலம் அதிகமிருப்பின் சிலர் வருங்காலங்களில் துணை ஆணையர்களாக ஆகும் வாய்ப்பும் உண்டு.
பணி உயர்வு பெறுபவர்கள் விவரம்:
கலிதீர்த்தான், மோகன்குமார், இளங்கோவன், முத்து சங்கரலிங்கம், சுந்தரவதனம், ராமு, குணசேகரன், அண்ணாமலை ஜெயச்சந்திரன், மாரிராஜன், ராஜா ஸ்ரீனிவாஸ், மோஹன் நவாஸ், பிரிதிவிராஜன், ரவிகுமார், ரவிச்சந்திரன், சார்லஸ், விஜயகுமார், சுப்பராஜ், ப்ரேமானந்த், முத்துசாமி, கண்ணன், சுதாகர், சுஷில் குமார், விஜயகுமார், கோவிந்தராஜ், கெங்கைராஜ், கிரிதர், பாண்டியன், தியாகராஜ், முரளிதரன், ரவிச்சந்திரன், ஜேசுராஜ், ரமேஷ்பாபு, சேகர், மலைச்சாமி, சரவணகுமார், பொன் கார்த்திக் குமார், விஜய கார்த்திக்ராஜ், கீதாஞ்சலி, பாஸ்கரன், கணேசன்.