Published : 26 Jun 2019 08:37 AM
Last Updated : 26 Jun 2019 08:37 AM

பொறியியல் மாணவர் சேர்க்கை; சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது: முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

2019 - 20-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

முதல் நாளான நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடந்தது. அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் 1,915. ஆனால், 141 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

தரவரிசையில் முதலிடம் பெற்ற மாணவர் பரத், கிண்டி பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் பாடப் பிரிவையும், 2-வது இடம் பெற்ற மாணவர் வருண் அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பிரிவையும் தேர்வு செய்தனர். அவர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.விவேகானந்தன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பழகன் கூறிய போது, ‘‘முதல்கட்டமாக நேரடி கலந்தாய்வு தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அடுத்தடுத்த கலந்தாய்வுகள் தொடர்ந்து நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகம் தனது 21 உறுப் புக் கல்லூரிகளில் ஒரு செமஸ்ட ருக்கான கல்விக் கட்டணத்தை ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிர மாக உயர்த்த அரசிடம் அனுமதி கோரியது. கல்விக் கட்டணத்தை ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்க அறி வுரை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

‘தமிழ்வழி பொறியியல் படிப் பில் மாணவர் சேர்க்கை குறைந் துவருகிறதே’ என்று செய்தியாளர் கள் கேட்டதற்கு, ‘‘தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு பணியில் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர மாணவர்களிடம் ஆர் வம் குறைவாக உள்ளது’’ என்றார்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான நேரடி கலந்தாய்வு இன்று நடக்கிறது. இதில் உள்ள 150 இடங்களுக்கு 950 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இதில் உள்ள 500 இடங்களுக்கு 1,650 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தரமணி சென்ட்ரல் பாலிடக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பணிமனையில் தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இப்பிரிவில் 5,288 இடங்கள் உள்ளன. இதற்கு 1,458 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x