Published : 20 Jun 2019 03:34 PM
Last Updated : 20 Jun 2019 03:34 PM

சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றுடன் விருது: தனியார் துறைகளை போல் பணியாளர்களுக்கு தோட்டக்கலைத்துறை கவுரவம்

தனியார் துறைகளைபோல் அரசு தோட்டக் கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிவோரை மாவட்டம் வாரியாக தேர்வு செய்து, அவர்களுக்கு துறை இயக்குனர் சிறந்த பணியாளர் என்ற பாராட்டு சான்றுடன் விருது வழங்கும் புதுமைதிட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பாராட்டுசான்று பெற்றவர்கள், தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற தூண்டுதலையும், மற்றவர்கள் அவர்களைப்போல் தாமும் அடுத்த ஆண்டு பெற வேண்டும் என்ற ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

ஆரம்ப காலத்தில் வேளாண்மைதுறையின் கீழ் ஒரு பிரிவாக மட்டுமே தோட்டக்கலைத்துறை செயல்பட்டது.

1979ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில், வேளாண்மைத்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை தனித்துறையாக செயல்படுகிறது.

இந்த துறை தற்போது தனி இயக்குனரின் கீழ் 2 கூடுதல் இயக்குனர்கள், 6 இணை இயக்குனர்கள், 39 துணை இயக்குனர்கள், 405 உதவி இயக்குனர்கள், 523 தோட்டக்கலை அலுவலர்கள், 1,602 உதவி தோட்டக்கலை அலுவலர்களுடன் செயல்படுகின்றது. 60 தோட்டக்கலைப்பண்ணைகள், 12 தாவரவியல் பூங்காக்கள் உள்ளன.

இந்த துறையில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலான காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணியாளர்களும், காலியாக இருக்கும் அருகில் உள்ள மற்றப் பணியிடங்களையும் கூடுதல் பொறுப்பாக பார்க்கின்றனர்.

முன்பு போல் தற்போது பதவி உயர்வுகளும் இல்லை. அதனால், ஊழியர்கள் சோர்வடையாமல் இருக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையா, இந்த ஆண்டு முதல் மாவட்டத்திற்கு சிறந்த 5 பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு அவர் கையோப்பமிட்ட

பாராட்டு சான்றிதழுடன் விருதும் அனுப்பி வைக்கிறார். இந்த பாராட்டு சான்று திட்டம் இந்த ஆண்டு முதல் இனி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட உள்ளது. இயக்குனர் சுப்பையா வழங்கும் இந்த பாராட்டு சான்று, பணியாளர் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. அதனால், பதவி உயர்வுகளில் இவர்களுக்கு முன்னுரிமை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதுகுறித்து துணை இயக்குனர் பூபதி கூறுகையில், ‘‘தற்போது அரசு துறைகளில் பதவி உயர்வுகள் அரிதாகிவிட்டது.  அதற்கு தோட்டக்கைலத்துறையும் விதிவிலக்கு அல்ல.

பாராட்டி சான்றிதழ் பெறுவோர் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய ஒரு தூண்டுதலாக அமையும். இந்த ஆண்டு இந்த பாராட்டு சான்று பெறாதவர்கள், அடுத்த ஆண்டு தாமும் பெற வேண்டும் ஊக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற பாராட்டுகள், ஊக்கவிப்புகள் தனியார் துறைகளில்தான் நடக்கும். இந்த சிறந்த பணியாளர்கள் தேர்வு பட்டியலுக்கு மாவட்ட தோட்டக்கலைத்துறையில் இருந்து பரிந்துரைப்படவில்லை. 

தற்போது தோட்டக்கலைத்துறையில் ஒவ்வொரு வட்டாரத்திலும் துணை இயக்குனர் முதல் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் வரை செய்யும் அன்றாட பணிகளை தோட்டக்கலைத்துறை வெப்சைட்டில் அப்லோடு செய்கின்றனர். இதை துறை இயக்குனரே நேரடியாகப் பார்த்து, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதில் சிறப்பாக செயல்பட்ட 5 பேரை தேர்வு செய்து, இந்த பாராட்டு சான்றிதழை அனுப்பி வைக்கிறார்.

துறை இயக்குனரின் நேரடிப் பாராட்டு சான்றிதழை, ஒரு விழா எடுத்து ஊழியர்களுக்கு வழங்குகிறோம்.

மதுரை மாவட்த்தில் சொட்டு நீர் பானசத்திற்காக மாநில அளவில் சேடப்பட்டி வட்டாரம் தேர்வு செய்து அதற்காக சிறப்பாக பணிபுரிந்த துணை இயக்குனர் பூபதி, உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட 5 பேருக்கு இந்த பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x