Published : 25 Sep 2014 10:48 AM
Last Updated : 25 Sep 2014 10:48 AM

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்: சிவசேனா - பாஜக கூட்டணியில் நீடிக்க சிறிய கட்சிகள் முடிவு

மகாராஷ்டிரத்தில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்து, சிவசேனா - பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக 3 சிறிய கட்சிகள் அறிவித்த சில மணி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டன.

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில் தொகுதி உடன்பாடு தொடர்பாக சிவசேனா பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ்விரு கட்சிகள் இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட உடன்பாட்டின் படி சிவசேனா 151 தொகுதிகளிலும் பாஜக 130 தொகுதிகளிலும் போட்டி யிட முடிவானது.

எஞ்சிய 7 தொகுதிகள் கூட்டணி யில் இடம்பெற்றுள்ள ஸ்வபிமானி ஷேத்காரி அமைப்பு (எஸ்.எஸ்.எஸ்), ராஷ்ட்ரிய சமாஜ் கட்சி (ஆர்.எஸ்.பி), சிவசங்கராம், இந்திய குடியரசு கட்சி (ஆர்.பி.ஐ) ஆகிய சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் 4 கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் அக்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன. இதில் எஸ்.எஸ்.பி., ஆர்.எஸ்.பி., சிவசங்கராம் ஆகிய கட்சிகள் கூட்ட ணியில் இருந்து வெளியேறுவதாக நேற்று அறிவித்தன.

மற்றொரு கட்சியான ஆர்.பி.ஐ., இனி அவர்களுடன் (சிவசேனா பாஜக) பேசுவதற்கு செல்லமாட் டோம். வேண்டுமானால் அவர்கள் வந்து பேசட்டும் என்று அறிவித்தது.

இந்நிலையில் சிவசேனா மூத்த தலைவர் ராம்தாஸ் கடாம் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “வரும் தேர்தலில் 150 இடங்களுக்கு குறைவாக நாங்கள் போட்டியிட முடியாது. கூட்டணி பிளவுபடாமல் காக்கவேண்டியது பாஜகவின் பொறுப்பு. அக்கட்சி 5 தொகுதிகளை விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும்” என்றார்.

இந்நிலையில் எஸ்.எஸ்.எஸ்., ஆர்.எஸ்.பி., சிவசங்கராம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று பிற்பகல் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு எஸ்.எஸ்.எஸ். தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ராஜு ஷெட்டி நிருபர்களிடம் கூறும்போது, “18 தொகுதிகள் தருமாறு கேட்டோம். இதனை உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொண்டார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x