Published : 14 Jun 2019 09:13 AM
Last Updated : 14 Jun 2019 09:13 AM

திருநெல்வேலி அருகே ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: உறவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

திருநெல்வேலி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கொலை யாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த வர் அசோக் (23). இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திரு நெல்வேலி மாவட்ட பொருளாள ராக பொறுப்பு வகித்தார். பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் வேலை முடிந்ததும் பேருந்தில் கரையிருப்பு கிராமத்துக்கு சென்றார். பேருந்திலிருந்து இறங்கி அவர் வீட்டுக்கு நடந்து சென்ற போது இருளில் மறைந்திருந்த ஒரு கும்பல் அசோக்கை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு, அவரது உடலை அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தும் அசோக்கின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத் துக்கு திரண்டு வந்தனர். கொலை யாளிகளை கைது செய்யக்கோரி மதுரை _ திருநெல்வேலி நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருநெல் வேலி மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், துணை காவல் ஆணை யாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் கூடுதல் போலீஸார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் மறியல் முடிவுக்கு வந்தது.

காரணம் என்ன?

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அசோக் தனது தாயாருடன் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப் போது பைக்கில் வைத்திருந்த புல் கட்டு அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு சமுதாயத் தைச் சேர்ந்த ஒருவர் மீது உரசி யுள்ளது. இதனால் அவர் அசோக் கிடம் தகராறு செய்ததுடன், அவரது தாயார் ஆவுடையம்மாளையும் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அசோக் தரப் பில் அளித்த புகாரின்பேரில் தச்ச நல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அசோக் கொலை செய் யப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சாலை மறியல்

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை அருகில் நேற்று சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதி பேச்சு வார்த்தைக் கூட்டத்தில் அசோக் கொலை வழக் கில் தொடர்புடையர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 8 முடிவுகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x