

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2019- 20ம் ஆண்டுக்கான இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வள பொறியியல் பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை குழு தலைவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 28.04.2019 முதல் 07.06.2019 வரை இணையதளம் வாயிலாக பெறப்பட்டது. கட்- ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பித்த மாணவர்களின் தற்காலிக தரவரிசைப் பட்டியல் நாளை (24.06.2019) பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் தங்களின் தற்காலிக தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகத்தின் (www.tnjfu.ac.in) இணையதள முகவரியில் விண்ணப்பதாரருக்கு அளிக்கப்பட்ட லாகின் ஐடி (login id)உதவியுடன் அறியலாம். மேற்கண்ட இத்தகவலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுக. பெலிக்ஸ் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.