

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வழித் தடங்களில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்காமல் புகை பரப்பும் இயந்திரங்களை மட்டும் வாங்கிக் குவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் சுமார் 1800 கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. அவை மழைநீர் வழிந்தோட மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஆனால் விதி களை மீறி விடப்படும் கழிவுநீரால் ஆண்டு முழுவதும் கொசு உற்பத்தி ஆதாரமாக இது மாறிவிடுகின்றன.
சென்னையில் உள்ள கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம், கேப்டன் காட்டன், ஓட்டேரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.
இவற்றில் உற்பத்தியாகும் கொசுக்களை, லார்வா புழு நிலையிலேயே அழிக்க வேண்டும். கொசு ஒழிப்பு பணியில், புழுவாக இருக்கும்போதே அழிப்பதுதான் சிறந்த பணி என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு கழிவுநீரில் உயிரி மருந்து தெளிக் கும் முறை உள்ளது. அதை மாநகராட்சி முறையாக செய்வ தில்லை. அவை வளர்ந்து கொசு வான பிறகு, அவற்றை அழிக்க புகை பரப்பும் முறையையே நம்பியுள்ளது.
இவ்வாறு புகை பரப்புவதால் கொசுக்கள் அழிவதில்லை. அதற்கு மருந்தின் தன்மை காரணமா, கொசுக்களுக்கு மருந்தை எதிர்க்கும் திறன் அதிகரித்துள்ளதா என்று எந்த ஆய்வும் அரசா லும், மாநகராட்சியாலும் மேற் கொள்ளப்படவில்லை.
மேலும் இந்தப் புகை மருந்து, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச் சினை உள்ளோர் மற்றும் குழந் தைகளுக்கு எதிரியாக உள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகம் கருத்தில் கொள்வதே இல்லை. ஆனால் மாநகராட்சி நிர்வாகத் திடம் ஏற்கெனவே, 312 கையினால் புகை பரப்பும் இயந்திரங்கள், 23 சிறிய ரக புகைப்பரப்பும் இயந்திரங்கள், 39 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் உள்ள நிலையில், ரூ.38 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேலும் 7 நவீன பெரிய புகை பரப்பும் இயந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மழைநீர் வடிகால்களிலும், நீர்வழித் தடங்களிலும் கழிவுநீர் விடுவதை தடுக்காமல், பயனற்ற புகை பரப்பும் இயந்திரங்களில் பெரும் பொருட்செலவில் தொடர்ந்து வாங்கி குவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
புகை பரப்பும் இயந்திரங்கள் தங்கள் பகுதிக்கு வந்தால் மட்டுமே, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
தற்போது உள்ள அளவுக்கு மேல் மருந்தின் வீரியத்தை அதிகரித்தால், அது மனிதர்களை பாதிக்கும் என்பதால், ஏற்கெனவே பொது சுகாதாரத்துறை பரிந் துரைத்த அளவிலேயே புகை பரப்பி வருகிறோம். புகை பரப்பும் கருவியே வேண்டாம் என ஒதுக்கிவிட முடியாது. வளர்ந்த கொசுக்களை ஒழிப்பதற்கு, அந்த இயந்திரங்கள் அவசியம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.