Published : 06 Jun 2019 02:00 PM
Last Updated : 06 Jun 2019 02:00 PM

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி படுகை அழிந்து விடும்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் எச்சரிக்கை

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், 'வேண்டாம் ஹைட்ரோ கார்பன் திட்டம்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி நீடராஜப்பர் வீதியில் உள்ள செகா கலைக் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

பூவுலகின் நண்பர்கள் கூட்ட மைப்பினர் திரளானோர் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு - புதுச்சேரி அமைப்பாளர் சீனு.தமிழ்மணி தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் மக்கள் உரிமைக் கூட்ட மைப்பு செயலாளர் சுகுமாறன், திராவிடர் விடுதலைக் கழகத் தலை வர் லோகு.அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங் கிணைப்பாளர் பேராசிரியர் ஜெய ராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது:

1950-களில் இருந்து ஓஎன்சிஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 1984-ல் மக்கள் வாழும் இடங்களிலேயே எண்ணைக் கிணறுகளை அமைத்து விட்டது. 1984க்கு பிறகு தமிழக பகுதி பாலைவனமாக மாறி வருகிறது. இதற்கிடையில், மத்திய அரசு கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் சுனாமியை விட பயங்கரமானது என்றார்.

கூட்டத்திற்குப் பின்னர், செய்தி யாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன், "தமிழகத்தில் மரக் காணத்தில் இருந்து வேளாங் கண்ணி வரை 5,099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வருகிறது. இத்திட்டத்தால் ஒட்டு மொத்தமாக காவிரி படுகை அழியும்.

20 ஆண்டுகளில் கடல் மட்டத்தை விட காவிரி படுகை தாழ்ந்து போகும். கடல் நீர் உள்ளே வந்து விடும். 56 லட்சம் மக்கள் அகதிகளாக மாறி விடுவார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வருகிற ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய மாநாடு ஒன்றை மயிலாடுதுறையில் நடத்த உள்ளோம். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை வேண்டி கேட்டுக் கொள்கிறோம். அது ஒன்றுதான் காவிரி படுகையை பாதுகாக்கக் கூடிய ஒரே வழி.

'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏற்க மாட்டோம், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முயற்சிப்போம்' என்று அனைத்து கட்சிகளும் உறுதி அளித்துள்ளன. இதுவே தமிழகம், புதுச்சேரியின் உண்மையான குரல். அதை மதித்து மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசு மவுனமாக இருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏற்க மாட்டோம், அப்படி வந்தால் எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்' என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்தது போல், தமிழக முதல்வரும் தெளிவாக அறிவிக்க வேண்டும். மக்களைக் காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.

வேளாண் பாதுகாப்பு மண்டலம்

முன்னதாக கூட்டத்தில், தமி ழகம் மற்றும் புதுச்சேரியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைச் செயல் படுத்துவதைக் கைவிட வேண்டு மென மத்திய அரசை வலியுறுத் துவது, காவிரி படுகை முழுவதை யும் வேளாண் பாதுகாப்பு மண்ட லமாக அறிவிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது, புதுச்சேரியில் உள்ள கட்சி, அமைப்புகளை ஒருங்கிணைத்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகார திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x