

என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்டாலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ''எங்களுடைய ஆட்சி போனாலும் பரவாயில்லை. மத்திய அரசு எங்களின் ஆட்சியைக் கலைத்தாலும் பரவாயில்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் ஹைட்ரோகார்பன் ஆராய்ச்சியை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம். இதுதான் எங்களின் நிலைப்பாடு.
ஆட்சி வரும், போகும். மக்கள்தான் முக்கியம். மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதைத்தான் ஆளுங்கட்சி செய்யவேண்டும். தேவைப்பட்டால் முதல்வர் என்ற பதவியைத் தூக்கி எறிந்து, மதச்சார்பற்ற கூட்டணியோடு இணைந்து போராடுவதற்கு நான் தயாராக உள்ளேன்'' என்றார் நாராயணசாமி.