

மதுரையில் ஆதரவற்ற முதியோருக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் அன்னபூரணி அமுத சுரபியகம் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை கருப்பாயூரணி சந்தைத் திடலில் அமுதசுரபியகம் திறக் கப்பட்டுள்ளது. இதனை மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் 108 பேர் அடங்கிய ‘மகா குழுமம்’ தொடங்கி உள்ளது. இங்கு தினமும் காலை முதல் மாலை வரை முதியோருக்கு தயிர் சாதம், மோர் சாதம், சீரகச் சாதம் வழங்கப்படுகிறது. தொடங்கிய முதல் நாளில் நூறுக்கும் மேற் பட்டோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
இதுகுறித்து மகா சுசீந்திரன் கூறியதாவது: திருவண்ணாமலையில் ஒவ் வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவில் கொடியேற்றம் முதல் தேர்த் திருவிழா வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு அன்னதானத்தைப் பலர் வீணடிப்பர். அதே நேரம் கிராம ங்களில் முதியோர் பலர், ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் உள்ளனர்.
இதனால் ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதைக் காட்டிலும் கிரா மங்களில் பசியால் வாடும் முதியோருக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது என முடிவு செய்து அமுதசுரபியகத்தைத் தொ டங்கியுள்ளோம். இங்கு தினமும் சூரியன் உதயம் முதல் அஸ் தமனம் வரை முதியோருக்கு தயிர் சாதம், மோர் சாதம், சீரகச் சாதம் இலவசமாக வழங்கப்படும். முதியோர் மட்டுமின்றி பசியால் வாடும் யாராக இருந்தாலும் இங்கு வந்தால் உணவு வழங்கப்படும், என்றார்.