

புதுச்சேரியை அடுத்துள்ள திருபுவனை பகுதியில் கீரை பறிக்கச் சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
புதுச்சேரி அடுத்துள்ள திருபுவனை கிராமத்தைச் சேர்ந்த செங்கேணி (60) மற்றும் விஜயா(55) ஆகிய இருவர் திருபுவனை பகுதியில் உள்ள தோப்பில், இன்று (புதன்கிழமை) கீரை பறிக்கச் சென்றனர். நேற்று இரவு அடித்த காற்றில் மின்சார ஒயர் அறுந்து விழே விழுந்தது. மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்திருப்பதைக் கவனிக்காமல் இருவரும் அதன் மீது கால் வைத்துள்ளனர்.
இதில் மின்சாரம் தாக்கிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருபுவனை போலீஸாரும், மின்துறை ஊழியர்களும் இருவரது உடலையும் மீட்டனர். இது குறித்து திருபுவனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.