Published : 22 Jun 2019 08:00 AM
Last Updated : 22 Jun 2019 08:00 AM

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்தவர் உயிரிழப்பு

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை வெட்டிவிட்டு ரயில் முன்பு பாய்ந்து தற் கொலைக்கு முயன்ற இளைஞர் சுயநினைவு திரும்பாமல் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகள் தேன்மொழி (26). இவர் சென்னை எழும்பூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்து, சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் சங்க அலுவலகத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ம் தேதி பணி முடித்துவிட்டு விடுதிக்குச் செல்ல இரவு 7.50 மணி அளவில் ரயிலுக்காக சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழி காத்திருந்தார். அங்கு வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் (27) என்பவர் தேன்மொழியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், ஆத்திரமடைந்த சுரேந்தர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன் மொழியை வெட்டினார். இதைப் பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். அங்கு பாதுகாப்பு பணி யிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் சுரேந் தரை பிடிக்க முற்பட்டார். அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவ ருக்கு தலையில் பலத்த காயம் ஏற் பட்டது. இதையடுத்து அவர் அரசு பொது மருத்துவமனையிலும் தேன்மொழி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசார ணையைத் தொடங்கினர். கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் தேன்மொழியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. அதேநேரம், தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்த சுரேந்தருக்கு டாக்டர் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந் நிலையில் நேற்று அவர் உயிரிழந் தார். அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எது உண்மை?

சுரேந்தர், தேன்மொழி இருவரும் ஊரில் காதலித்து வந்ததாகவும் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுரேந்தரிடம் பழகுவதையும் பேசுவதையும் தேன்மொழி நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. சுரேந்தர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், போலீஸை பார்த்ததும் தப்பித்து ஓடும்போது ரயிலில் அடிப்பட்டுவிட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x