சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்குகின்றன.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்க உள்ளன. தேர்வுகள் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறும். ஜூலை 8-ம் தேதி தொடங்கவுள்ள டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், சென்னை மையத்தில் மட்டும் அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாக நடைபெறும். தேர்வு காலஅட்டவணை மற்றும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in