

ஐ.நா. கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ச பங்கேற்பதைக் கண்டித்து வைகோ தலைமையில் மதிமுகவினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை: இனப்படுகொலையை ஈழத்தமிழர்கள் மீது ஏவிய இலங்கை அதிபர் ராஜபக்ச, சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக் கப்பட வேண்டியவர். ஐ.நா. மனித உரிமை ஆணையத் தின் விசாரணைக் குழுவை இலங் கைக்குள் அனுமதிக்க மாட்டேன் என ராஜபக்ச கூறுகிறார்.
இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என் தலைமையில் செவ்வாய்க் கிழமை(இன்று) சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.