

தமிழகத்தில் 7 டிஐஜிகளுக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு (பழைய பதவி அடைப்புக்குள்):
கே.சங்கர் (சென்னை கிழக்கு இணை ஆணையர்) கோவை மேற்கு மண்டல ஐஜியாகவும், ஏ.அமல் ராஜ் (சேலம் டிஐஜி சேலம் ஆணையர்) சேலம் ஐஜி ஆணைய ராகவும், எச்.எம்.ஜெயராம் (தமிழ் நாடு போலீஸ் அகாடமி டிஐஜி) காவல்துறை நலன் ஐஜியாகவும், ஆர்.திருஞானம் (சென்னை தெற்கு இணை ஆணையர்) காவல்துறை தலைமையிடத்து கூடுதல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கே.பி.சண்முக ராஜேஸ்வரன் (திருச்சி ஆயுதப்படை டிஐஜி) திருச்சி ஆயுதப்படை ஐஜியாகவும், பி.தாமரைக்கண்ணன் (நிர்வாகத் துறை ஐஜி) சென்னை போக்குவரத்து துறை போலீஸ் கூடுதல் ஆணையராகவும், எஸ்.டேவிட்சன் தேவஆசீர்வாதம் (கோவை மேற்கு மண்டல ஐஜி) நிர்வாகத்துறை ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் அபூர்வவர்மா நேற்று வெளியிட்டார்.