Published : 03 Jun 2019 03:12 PM
Last Updated : 03 Jun 2019 03:12 PM

விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் நீட்டிப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டித்து ஓய்வூதியம் அறிவித்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தை, நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்கள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு நீட்டித்ததற்காகவும், விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பதற்கு உறுதுணையாக, அவற்றுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் நோய், புருசெல்லோசிஸ் ஆகிய நோய்களால் ஏற்படும் பண செலவுகளை மத்திய அரசே ஏற்கும் என அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கடை வைத்திருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியோருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை நீட்டித்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் சமூகத்திலுள்ள பெரும்பாலானோருக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும். இவை, விவசாயிகள், வியாபாரிகள், சுயதொழில் செய்வோர் ஆகியோருக்கும் பாதுகாப்பை வழங்கும்.

மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கும், திட்டங்களைச் செயல்படுத்தவும் தமிழக அரசு எல்லா விதங்களிலும் உறுதுணையாக இருக்கும்", என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x