மழையின்றி குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்: மதுரை நகர குடிநீருக்கு சிக்கல்

மழையின்றி குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்: மதுரை நகர குடிநீருக்கு சிக்கல்
Updated on
1 min read

நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மதுரை நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த சில மாதங்களாகவே அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கான நீர்வரத்து நின்றுவிட்டது. அணையில் உள்ள நீர் சேட பட்டி, தேனி மற்றும் ஆண்டி பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக வினாடிக்கு 60 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெரியாறு அணையில் இருந்தும் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அ டி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயத்துக்காக வரும் வழியில் நீர் திருடப்படுவதால் வழி நெடுகிலும் நீர் குறைந்து கொண்டே வருகிறது.

நீர் வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக குறைந்துள்ளது. இதில் 15 அடி வரை வண்டல் மண்தான் படிந்துள்ளது. நீர்வரத்தும் இல்லாததால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 971 கன அடி யாகவும் இருந்தது. தற்போது நீர்மட்டமும் குறைந்து, நீர்வரத்தும் இல் லாததால் மதுரையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in