ரஜினி முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம்

ரஜினி முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம்
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

தான் அரசியலுக்கு வருவது உறுதி என 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. தமிழகத்தில் அடுத்துவரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் முதல்வராக வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சாந்தி யாகத்தில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ், மற்றும் அவரது மருமகனும், கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்றச் செயலாளருமான சந்திரகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், ரஜினி நீண்ட ஆயுள் பெற வேண்டியும், அவர் அரசியலுக்கு வருவதற்காகவும், 2021 ஆம் ஆண்டு ரஜினி முதல்வராக வேண்டியும், மழை வேண்டியும், 11 தீட்சிதர்கள் முன்னிலையில் யாகம் நடைபெற்றதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in