Published : 16 Jun 2019 08:07 AM
Last Updated : 16 Jun 2019 08:07 AM

‘தி இந்து’ குழுமம் சார்பில் ‘நம்ம ஊரு, நம்ம ருசி’ சீசன்-2 சமையல் போட்டி

இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தின் பாரம்பரிய உணவு முறைகளில் செய்யும் உணவுகளை அதன் மாறாத சுவைக்காகவே பலரும் விரும்பி ருசிக்கின்றனர். தங்கள்வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு பாரம்பரியமான சுவையான நல்ல உணவை வழங்கும் விருந்தோம்பல், தமிழ் மக்களின்சிறந்த பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

தமிழ் உணவு வகைகளின் பன்முகத்தன்மை, அதன் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை அடையாளம் காணும் பொருட்டு ‘நம்ம ஊரு, நம்ம ருசி’சமையல் போட்டி நடத்தப்படுகிறது. இதன் சீசன்-2 பகுதி தமிழகத்தில் உள்ள 15 ஊர்களில் முதல்கட்டமாக நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டப் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு, இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்து சிறந்த உணவைத் தேர்வுசெய்ய இருக்கிறார். கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை,வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் இந்தச்சமையல் போட்டி நடைபெறஉள்ளது.

தமிழக உணவின் சுவையைப்பிரதிபலிக்கும் வகையிலான ஒருஉணவை நீங்கள் வீட்டிலேயே சமைத்து போட்டிக்கு எடுத்து வரலாம். அது சைவம் அல்லதுஅசைவ உணவாகவும் இருக்கலாம். நீங்கள் கொண்டுவரும் உணவில் சிறந்த 3 உணவுகளைநடுவர் குழுவினர் தேர்வுசெய்வர். தேர்வு செய்யப்படும்உணவுகளைத் தயாரித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம் மதிப்பில், 'விடியும்' நிறுவனத்தின் தயாரிப்புப் பொருட்கள் பரிசாக வழங்கப்படும். சென்னையில் நடைபெறும் 2-ம் கட்டப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம்,ரூ.60 ஆயிரம், ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

இந்தப் போட்டியின் நடுவராகபொறுப்பேற்றுள்ள பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு கூறும்போது, “தமிழகத்தின் உணவு பாரம்பரியம் வெகுசிறப்பானது. தமிழர்களின் உணவும்உபசரிப்பும் பலராலும் பாராட்டப்படுகிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு வகை உணவு சிறப்பாக இருக்கும். தஞ்சாவூர் சாம்பார், விருதுநகர் புரோட்டா, திருச்சி விரால் மீன் குழம்பு, கோவில்பட்டி முறுக்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி சுவையுடையவை.

தமிழக உணவுகளில் மிளகாய், மிளகு, கொத்தமல்லி, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள்,புதினா இலைகள், தேங்காய்ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பொருட்களில் மருத்துவ குணங்களும் உள்ளன.

இந்த உணவுகளில் நான் தேடுவது சுவை, நம்பகத்தன்மை, பாரம்பரியம் மற்றும் அதன்மருத்துவ மதிப்பு ஆகியவற்றைத்தான்” என்றார்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் 97100 11222 இந்த செல்பேசி எண்ணுக்கு Name City Dish Name ஆகியவற்றை எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தப் போட்டியை ‘தி இந்து’குழுமம் இணைந்து ‘விடியும்', ‘சேவரி & ஆர்கேஜி நெய்', ‘ஃபார்சூன் சன்பிளவர் ஆயில்', ‘நாகா',‘இந்து தமிழ் திசை', ‘நியூஸ்-18', ‘அவள் விகடன்', ‘பிக்எஃப்.எம். சென்னை' ஆகியவைஇணைந்து நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x