Last Updated : 11 Jun, 2019 12:00 AM

 

Published : 11 Jun 2019 12:00 AM
Last Updated : 11 Jun 2019 12:00 AM

பஸ்ஸில் மடிக்கணினி, ஸ்மார்ட் போன் திருடியவரை தொழில்நுட்ப உதவியுடன் வளைத்து பிடித்த பொறியாளர்- மதுரையில் போலீஸாருக்கு சவாலான சம்பவம்

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலை யத்தில் மடிக்கணினி, ஸ்மார்ட் போன் திருடியவரை, தனது தொழில்நுட்ப அனுபவத்தால் பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்து போலீஸிடம் சிக்க வைத் தார்.

மதுரையைச் சேர்ந்தவர் ஜெயப் பிரகாசம்(28). மடிக்கணினி, கணினி பழுது நீக்கும் பொறியாளர். 3 நாட்களுக்கு முன்பு, காலையில் வேலை நிமித்தமாக ஈரோடு செல்ல ஆரப்பாளையம் பஸ் நிலையம் சென்றார். பஸ்ஸில் ஏறி மடிக்கணினி, ஆப்பிள் ஐ-பேடு வைத்திருந்த பேக்கை இருக்கையின் மேலே வைத்தார். பின்னர் இருக்கையில் அமர்ந்து செல் போனில் பேசினார்.

அப்போது தனது பேக் மாயமானதை அறிந்து கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸாரும் விசாரித் தனர். பொறியாளர் தனது தொழில்நுட்ப அனுபவத்தால் மற்றொரு ஸ்மார்ட் போனில் இருந்து திருடுபோன தனது ஐ-பேடு இணையதள முகவரியை கண்காணித்தார். அப்போது மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மடிக்கணினி உள்ளதாக தெரிய வந்தது. இது பற்றி போலீஸாருக்கு ஜெயப்பிரகாசம் தெரிவித்தார். போலீஸார் அந்த விடுதி யில் ஆய்வு செய்தும் அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே ஜெயப்பிரகாசம், சம்பவம் நடந்த அடுத்த நாள் காளையில் தனது நண்பர்களுடன் ஆரப்பாளையம் பஸ் நிலையம் முழுவதும் கண்கா ணித்தார். அப்போது வெளியூர் புறப்பட்ட தயாராக இருந்த பேருந்தில் இருந்து, இளைஞர் ஒருவர் மடிக்கணினி இருந்த பேக்குடன் அவசரமாக கீழே இறங்கி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த ஜெயப்பிரகாசமும், நண்பர்களும் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் கரிமேடு போலீஸில் அவரை ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்தான் ஜெயப்பிரகாசத்தின் பேக்கை திருடி யவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் டவுன்ஹால் ரோடு தனியார் விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்தது. போலீஸார் அவர் தங்கி யிருந்த அறையை ஆய்வு செய்து, ஜெயப்பிரகாசத்தின் பேக் உட்பட 10-க்கும் மேற்பட்ட லேப்-டாப் பேக்குகள் இருந்ததைக் கைப்பற்றினர்.

வெளியூரைச் சேர்ந்த அவரும், கூட்டாளிகள் 3 பேரும் மதுரையில் தங்கி பேருந்து நிலையங்களில் லேப்-டாப், நகை உள்ளிட்டவற்றை திருடியது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜெயப்பிரகாசம் கூறியதாவது: தொழில்நுட்ப அனுபவத்தை பயன்படுத்தி திருடர்கள் தங்கி இருந்த இடத்தைக் கண்டுபிடித்தேன். பெரிய நெட்வொர்க் அமைத்து திருடுவர் என யூகித்து பேருந்து நிலை யத்தை நண்பர்களுடன் சேர்ந்து கண் காணித்தோம். இதில் எனது பேக்கை திருடியவர் சிக்கினார். ஆப்பிள் போன் போன்ற விலை உயர்ந்த மின் சாதனப் பொருட்களை யாராவது திருடினால், அதற்கான இணைய முகவரியை மற்றொரு போன் மூலம் தொடர்புகொண்டு பொருள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடலாம்.திருட்டு போன போனுக்கு நெட் இணைப்பு இல்லாமல் இருந்தாலும், போனை அணைத்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து விடும் வசதி உள்ளது என்றார்.

ஏற்கெனவே சிக்கிய கும்பல் ?

கடந்த ஓராண்டுக்கு முன், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தொடர்ந்து மடிக்கணினிகள் திருடப்படுவதாக புகார்கள் வந்தன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிசிடிவி கேமராவில் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், நெல்லையைச் சேர்ந்த ஒரு கும்பல் தினமும் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்து வெளியூர் பஸ்களில் ஏறும் பயணிகள் அசந்த நேரம் பார்த்து, அவர்களின் மடிக்கணினிகளை திருடி வந்தது தெரிய வந்தது. அக்கும்பலிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இக்கும்பலுக்கும் ஆரப்பாளையத்தில் கைவரிசை காட்டியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x