Published : 15 Jun 2019 05:34 PM
Last Updated : 15 Jun 2019 05:34 PM

சுகாதாரத் துறையில் வாடிக்கையாளர் சேவை குறித்து இலவசப் பயிலரங்கு: சென்னையில் வரும் 22-ம் தேதி நடக்கிறது

சுகாதாரத் துறையில் வாடிக்கையாளர் சேவை குறித்து இலவசப் பயிலரங்கு சென்னை மதுரவாயலில் உள்ள ரவீனா பல்நோக்கு மருத்துவமனையில் வரும் 22-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து பயிலரங்கு பயிற்சி அமைப்பாளர் மகாலிங்கம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வாடிக்கையாளர் சேவை எந்த ஒரு சேவை நிறுவனத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதன் மூலமே ஒரு நிறுவனம் வாடிக்கையாளர் சேவைத் திறன், கூர்மை மற்றும் வாடிக்கையாளர்கள் கையாள்வதில் நமது திறனை, நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும். மேலும் தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை என்பது சிறந்த மார்க்கெட்டிங் உத்தியும் ஆகும்.

இதனைக் கருத்தில்கொண்டே ரவீனா பல்நோக்கு மருத்துவமனை வாடிக்கையாளர் சேவை என்ற சிறப்பு பயிலரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மற்றும் நல்லெண்ணங்களை மேம்படுத்துவதற்க்கும் உதவி செய்யும் வகையில் இந்தப் பயிலரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை பயிலரங்கின் முக்கிய நோக்கங்கள்:

இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்வதன் மூலம் வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடுபவர்கள் கீழ்க்காணும் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.

1.  வாடிக்கையாளர் சேவையின் போது அழுத்தம் அதிகரிக்கும் வேளையில் அமைதியாக மற்றும் நம்பிக்கையோடு இருப்பதால் ஏற்படும் விளைவுகள்.

2.  சேவை பெற வந்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் உடன் பணியாற்றும் உள் வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்தும் கோபம், அழுத்தத்தை வெளிப்படுத்தும் வாடிக்கையாளர்களைக் கையாளும் முறை.

3.  வாடிக்கையாளர்களுக்கு கனிவான முறையில் பதில் கூறும் முறை.

4.  வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டுகளைவிட அவர்களுடைய பிரச்சினைக்ளுக்கு தீர்வு காண்பதே அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுதல்.

5.  வாடிக்கையாளரின் அனுபவங்கள் மறக்க முடியாத ஒன்று  என்பதைப் புரிந்து செயல்படுதல்.

6.  வாடிக்கையாளர் சேவை என்பது ஒரு சங்கிலித்தொடர் என்ற புரிதல் உணர்வை மேம்படுத்துவது.

வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள், வரவேற்பரை பணியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு உதவிசெய்யும் பணியாளர்கள், கட்டணங்கள் வசூலிக்கும் கேஷியர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், தங்களது திறமைகளை வலுப்படுத்திக்கொள்ளவும் தங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆர்வம் உள்ள அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் சேர ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யும் பட்டதாரிகள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

சிறந்த சேவை வழங்க வேண்டிய அவசியம், வாடிக்கையாளர் சேவை தரநிலைகள் மற்றும் இலக்குகள், வாடிக்கையாளர் தொடர்புக்கலை, வாடிக்கையாளர்களுக்கு உபசரிப்பு கொடுங்கள், வாடிக்கையாளர் மற்றும் விருந்தினர் சூத்திரம் என்பது என்ன? அதனை எவ்வாறு பயன்படுத்துவது?, வாடிக்கையாளர் சேவை என்பது ஒரு சங்கிலித்தொடர், வாடிக்கையாளர் தேவையைப் புரிந்து கொள்வது, வாடிக்கையாளர்களை வகைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள், வாடிக்கையாளரின் பிரச்சினைகளில் இருந்து திறமையான உத்திகளை உருவாக்குவது, சிறந்த வாடிக்கையாளர் சேவை மூலம் உங்கள் நிறுவனத்தை வாடிக்கையாளரின் முதல் தேர்வாக மாற்றுவது போன்றவை குறித்து பயிலரங்கில் விவாதிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன் பதிவு உள்ளிட்ட மற்ற விவரங்களுக்கு பயிற்சி அமைப்பாளர் மகாலிங்கத்தைத் தொடர்புகொள்ளலாம். மொபைல் : (0) 97104 85295. இ மெயில்: 2525india@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x