Last Updated : 17 Jun, 2019 12:00 AM

 

Published : 17 Jun 2019 12:00 AM
Last Updated : 17 Jun 2019 12:00 AM

புதுச்சேரியில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு பாலைவனமாகும் ஊசுடு ஏரி: பறவைகள் வரத்து நின்றது - படகு போக்குவரத்தும் ரத்து

புதுச்சேரியின் மிகப்பெரிய ஊசுடுஏரி வறண்டுவருகிறது. 80 ஆண்டுக ளில் இல்லாத அளவுக்கு இம்முறை காய்ந்து வெடிப்பு நிலைக்கு சென் றுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள 84 ஏரிக ளில் மிகப்பெரிய ஏரி ஊசுடு ஏரி. புதுச்சேரியில் தொடங்கி தமிழக எல்லைப்பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட பூத்துறை, கடப்பேரிக்குப்பம் பகுதிகள் வரை ஏரி பரவி யுள்ளது.

இந்த ஏரியின் மொத்த நீர்ப் பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் நீளம் 7.275 கி.மீ.

மொத்த கொள்ளளவு 540 மில்லியன் கனஅடி. சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலி ருந்து ஏரிக்கு பெருமளவில் நீர்வருகிறது. 1,500 எக்டேர் நிலங் கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியின் தண்ணீரை ஊசுடு,ராமநாதபுரம், பத்துக்கண்ணு, சுத்துக்கேணி, சேதுராப்பட்டு, வில்லியனுார், ஒதியம்பட்டு, துத் திப்பட்டு உள்பட 40 கிராமங் களை சேர்ந்த விவசாயிகள் நம்பியுள்ளனர்.

தற்போது ஊசுட்டேரி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கி வறண்டு காணப்படுகிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகளின் வரத்து முற்றிலும் நின்று விட்டது.

தூர் வாரவில்லைஇதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "80ஆண்டுகளாக இல்லாத வகையில் தற்போது ஊசுடு ஏரிவறண்டு இருக்கிறது. புதுச்சேரிஅரசு ஏரியை தொடர்ந்து தூர் வாரியிருந்தால் இப்பிரச்சினை இருக்காது" என்றனர்.

இதுகுறித்து பறவை ஆர்வ லர்கள் கூறுகையில், "ஊசுடு ஏரியில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் 29 வகையான வெளி நாட்டு பறவையினங்கள் உள்பட100-க்கும் மேற்பட்ட பறைவையினங்கள் இனப்பெருக்கத்துக் காக வந்து செல்கின்றன. இந்தஆண்டு கடுமையான வறட்சியின் காரணமாக ஊசுட்டேரி வறண்டுள்ளது. இதனால் பிளம் மிங்கோ, பெலிகான், பெயின்டர் ஸ்டோர்க் போன்ற வெளிநாட்டு பறவைகள் வரவில்லை. ஏரியின் நடுவே பறவைகள் இல்லாமலும், மீன்கள், ஆமைகள் இறந்து கிடக்கின்றன" என்றனர்.

இப்பகுதி கிராம பொதுமக்கள்கூறுகையில், "புதுச்சேரியின் நிலத்தடி நீர் மட்ட அளவை உயர்த்துவதில் முக்கிய நீர் ஆதார மாக ஊசுடு ஏரி உள்ளது. வறட்சியின் காரணமாக நீர் இல்லாமல்வறண்ட வெடித்த நிலப்பரப்புக ளாக எங்கள் நினைவுத் தெரிந்தநாட்களில் இப்போதுதான் பார்க்கி றோம். புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 4,000 ஹெக்டேர் நிலங்களின் தற்போதையசூழலும் கேள்வி குறியாகியுள் ளது" என்றனர்.

அடைப்பட்ட வரத்து வாய்க்கால்கள்

ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் இங்கு இயக்கப் படும் படகு போக்குவரத்து நீரின்றிதற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஏரியை சுற்றி குடிநீர் கேன்கள் விற்பனை நிறுவனங்கள் தொடங்கி தண்ணீர் சார்ந்த தொழில் புரிவோர் பலரும் கட்டுபாடின்றி நீரை உறிஞ்சும் போக்கு அதிகரித்துள்ளது. அரசின் கண்டுகொள்ளாத போக்கினாலும், நீர் வரத்துவாய்க்கால்கள் அடைப்பட்டுள் ளன. மிகப்பெரிய நீர் ஆதார மையமான ஊசுடு ஏரி பாலைவனமாகி வருவதாக விவசாயி கள் கவலை அடைந் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x