அரசு மருத்துவமனைகளில் ‘நிபா வைரஸ்’ தீவிர சிகிச்சைப் பிரிவு தொடக்கம்: கேரளாவில் இருந்து 8 மாவட்டங்களுக்கு வருபவர்களை கண்காணிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் ‘நிபா வைரஸ்’ தீவிர சிகிச்சைப் பிரிவு தொடக்கம்: கேரளாவில் இருந்து 8 மாவட்டங்களுக்கு வருபவர்களை கண்காணிக்க உத்தரவு
Updated on
2 min read

கேரளாவில் நிபா (NIPAH) வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தமிழகத் துக்கு வருபவர்கள் மூலம் இங்கும் நிபா வைரஸ் பரவும் அபாயம் உள் ளது. இதைத் தடுக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளிலும் பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப் பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் பரவியது. இந்த நோய்க்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதற்குள் 17 பேர் பலியானார்கள். மீண்டும் நிபா வைரஸ் வராமல் தடுக்க அந்த மாநில சுகாதாரத் துறை தீவிர முயற்சி எடுத்தது. எனினும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண் டும் நிபா வைரஸ் கேரளாவில் மீண்டும் பரவி வருகிறது. தற்போது கேரளாவில் நிபா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நிபா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், அதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கன்னியாகுமரி, தேனி, கோவை, திருநெல்வேலி (செங்கோட்டை) உள்ளிட்ட கேரள மாநில எல்லையோரங்களில் அமைந்துள்ள, 8 தமிழக மாவட் டங்களில் உஷார் நிலை பிறப்பிக் கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங் களின் மாநில எல்லையோர சோதனைச்சாவடிகள் அருகே தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து, கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருக்கிறதா என்று சோதனை செய்யப்படுகிறது.

நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி யுடன் யாராவது வந்தால் உடனே அவர்களை தனிமைப்படுத்தி 108 ஆம்புலன்சில் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையை தொடங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மருத்துவக் கல் லூரி டீன்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதற்கேற்ப கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிபா வைரஸ் நோயாளிகளுக்கென தனி தீவிர சிகிச்சைப்பிரிவு தொடங்கப் பட்டுள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவுக்கு 3 ஷிப்ட் அடிப்படை யில் 5 மருத்துவர்கள் தலைமை யில் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொண்ட மருத் துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனையில் நேற்று 33 படுக்கை கள் கொண்ட நிபா வைரஸ் தனி தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப் பட்டது. இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறும் போது, "நிபா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் வந் தால் அவர்களுக்காக இந்த சிகிச் சைப் பிரிவில் ஐசியு வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மருந்து மாத்திரைகள், அதற்கான மருத் துவக் கருவிகள் தயார் நிலையில் உள்ளன" என்றார்.

கோவையில்..

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் பி. அசோகன் கூறியதாவது: பொது சுகாதாரத் துறையும், கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கோவை அரசு மருத்துவமனை யிலும் நேற்று ‘நிபா’ தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. இதில், ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.

தனியார் மருத்துவமனைகள் கண்காணிப்பு

சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன் குமார் (மதுரை) கூறும்போது, ‘‘அனைத்து மருத்துவர்களுக்கும் எதனால் நிபா வைரஸ் பரவுகிறது, வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளோம்.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள் குறித்த தகவல்களை தர அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கும் தமிழக கல்லூரி நிர்வாகிகளுக்கும், அந்த மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் தகவல் தர அறிவுறுத்தி உள்ளோம்.

நோய்த்தொற்றுகள் பாதிக்கப்படாமல் இருக்க கை கழுவும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். தொண்டை வலி, அதிக உடல் வலி, மூச்சு விட சிரமம் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். இதற்காக ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவுகள் பெறப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in