Published : 22 Jun 2019 07:57 AM
Last Updated : 22 Jun 2019 07:57 AM

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.60 கோடியில் சர்வதேச யோகா - இயற்கை மருத்துவ மையம்:  சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் 

சென்னை

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.60 கோடி மதிப்பில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உலக யோகா தினத்தை முன் னிட்டு, சென்னை அண்ணா சாலை யில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத் தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர் யோகா பயிற்சி செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், கூடுதல் செயலாளர் கிரண் குராலா, இணை செயலாளர் நடராஜன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோ பதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இயக்குநர் செந்தில்ராஜ், யோகா கின்னஸ் சாதனையாளர் யோகராஜ் சி. பூவேந்திரன், திரைப் பட நடிகை காயத்ரி ரகுராம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல் லூரி முதல்வர் மணவாளன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலின்படி உலகம் முழு வதும் ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று 5-வது சர்வதேச யோகா தினமாகும். ஜுன் 21 வரு டத்தின் நீண்ட பகல் கொண்ட தினம் என்பதாலும் யோகா நம் வாழ்வின் ஆயுளை நீட்டிப்பதனாலும் இந் நாளில் யோகா தினம் கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘ஆரோக்கிய இதயத் துக்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவம்’ என்பதாகும்.

யோகா என்பது உடலையும் மனதையும் வலுவடையச் செய்யும் ஓர் எளிய பயிற்சி. யோகா சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற பல வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானது. ரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசக் கோளாறு, உடல் பருமன், தூக்க மின்மை போன்ற வாழ்வியல் நோய்களுக்கு தீர்வு காண்பதற்கு யோகா பெரிதும் உதவுகிறது. மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்றவற்றை குறைப்ப தற்கும் யோகா பயன்படுகிறது.

சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் இயற்கை வழி யில் உடற்பருமனை குறைக்க சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இச்சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகள் இல் லாத சிகிச்சைகளான நீராவி குளி யல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணா நோன்பு உட்பட பல்வேறு சிகிச்சையும் எவ்வித கட்டணமு மில்லாமல் அளிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத் துவப் பிரிவில் 72 டாக்டர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். ரூ.60 கோடி மதிப்பில் 50 ஏக்கரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் விரைவில் அமைக்கப் படும் ரூ.12 கோடியில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்து வக் கல்லூரி மாணவிகளுக் கான விடுதி கட்டிடம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x