Published : 12 Jun 2019 08:56 AM
Last Updated : 12 Jun 2019 08:56 AM

மாநில திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் மனு; தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி அளித்தனர்

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அமைச்சர்களான பி.தங்க மணி, எஸ்.பி.வேலுமணி ஆகி யோர் நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை, மத்திய ரயில்வே அமைச்சரும், தேர்தலின் போது தமிழகத்துக்கு பொறுப்பாள ராக இருந்தவருமான பியூஷ் கோயலை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது அவ ரிடம் அமைச்சர் வேலுமணி அளித்த மனுவில், ‘‘சேரன், நீல கிரி விரைவு ரயில்களில் குளிர் சாதன வசதி இல்லாத முதல் வகுப்பு பெட்டிகளை மீண்டும் அறிமுகப் படுத்த வேண்டும். மதுக்கரை ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள மரப்பாலத்தை விரிவாக்கம் செய் வதுடன், கோவை விமான நிலை யத்தை விரிவுபடுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக அமைச்சர்கள் இருவரும் சந்தித்தனர். அப்போது அமைச்சர் வேலுமணி மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியிருப் பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 லட்சத்து 78 ஆயிரம் மக்களுக்காக தினசரி 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.2 ஆயிரம் கோடியில் செயல்படுத்த திட்ட அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 10 லட்சத்து 77 ஆயிரம் மக்களுக்கு தினசரி 78.40 மில்லியன் லிட்டர் குடி நீர் வழங்கும் வகையில் ரூ.1,800 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட் டுள்ளது. அதேபோல், ரூ.1000 கோடியில் 155 கூட்டுக்குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வாரியம் பராமரிக்கும் கூட் டுக் குடிநீர் திட்டங்களில் நீர் விநியோகத்தை சீரமைக்க ரூ.100 கோடியில் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

அதேபோல், நீராதாரங்களை மழைநீர் சேகரிப்பின் மூலம் மேம் படுத்தும் திட்டத்துக்காக ரூ.50 கோடி யிலும், ஊரக உள்ளாட்சிகளில் வறட்சி துடைப்பு பணிகளுக்காக ரூ.448 கோடியிலும் திட்டம் தயா ரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 1,000 பெரிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.300 கோடியில் நுண் உர மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு நிதி அளிப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரையும் அமைச்சர் வேலு மணி சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x