

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத் தேர்தல், வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 65 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடைபெற்றது. இதில், 7 ஊராட்சி தலைவர்கள், 2 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 2 பேரூராட்சி கவுன்சிலர், 27 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 38 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பதவிகளுக்கு 77 போட்டியிடுகின்றனர். இப்பகுதிகளில், வாக்கு பதிவுக்காக 95 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இதில், 79 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்குப் பதிவு நாளன்று வெப் கேமரா மூலம் கண்காணிக்கவும், பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.