Published : 18 Sep 2014 12:32 PM
Last Updated : 18 Sep 2014 12:32 PM

வாகனங்களை சுத்தம் செய்து காஷ்மீர் மக்களுக்காக நிதி திரட்டும் இளைஞர்

காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத் துக்காக, வித்தியாசமான முயற்சியை தொடங்கியிருக்கிறார் பாளையங்கோட்டை சாந்திநகர் இளைஞர் பா.பாப்புராஜ்.

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப வரும் இருசக்கர வாகனங்களை சுத்தம் செய்து அதன்மூலம் நிதி திரட்டும் பாப்புராஜின் செயலுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வித்தியாச முயற்சி

திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் புதன்கிழமை நிவாரண நிதி திரட்டும் பணியை அவர் மேற்கொண்டிருந்தார். பெட்ரோல் நிலையம் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் விபரத்தை எடுத்துரைத்து, அந்த வாகனங்களை துணியால் துடைத்து சுத்தம் செய்தார்.

பின்னர் தான் வைத்திருந்த உண்டியலில் முடிந்த அளவு நிதி வழங்குமாறு கூறினார். வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் வாகனங்களை சுத்தம் செய்ய விடாமலேயே, உண்டியலில் தங்களால் இயன்ற பணத்தை செலுத்திச் சென்றனர்.

தொடர் திட்டம்

இவ்வாறு ஒரு வாரகாலத்து க்கு திருநெல்வேலி, பாளையங் கோட்டையில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களிலும் இருசக்கர வாகனங்களை சுத்தம் செய்து நிதி திரட்ட பாப்புராஜ் திட்டமிட்டிருக்கிறார். சேகரமாகும் நிதியை மாவட்ட ஆட்சியர் மூலம் பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.

பாப்புராஜ் கூறும்போது, ‘ஜம்மு காஷ்மீரில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை நாளிதழ், தொலைக்காட்சியில் பார்த்து வேதனை அடைந்தேன். அங்குள்ள சகோதர சகோதரிகளுக்காக நிவாரண நிதி திரட்ட திட்டமிட்டேன்.

அதன்படி புதன்கிழமையிலி ருந்து 7 நாட்களுக்கு தினமும் 2 மணிநேரம் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் இருசக்கர வாகனங்களை சுத்தம் செய்து நிதி திரட்டவுள்ளேன், என்றார் அவர்.

முந்தைய பணிகள்

ஏற்கெனவே இவர் குஜராத் பூகம்பம், சுனாமி பேரழிவு, இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக செருப்பு துடைத்து நிதி திரட்டி அளித்திருக்கிறார். தானே புயல் பாதிப்பின்போது திருநெல்வேலி யில் கார்களை சுத்தம் செய்து நிதி திரட்டியிருந்தார். ஒடிஸா புயல் வெள்ள பாதிப்பின்போது வெள்ள நிவாரண நிதி திரட்ட டீ விற்றிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்குமுன் பூரண மதுவிலக்கு வேண்டி டாஸ்மாக் கடைகளுக்கு விவேகானந்தர் வேடமிட்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x