Published : 08 Jun 2019 11:07 AM
Last Updated : 08 Jun 2019 11:07 AM

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் பாதுகாக்கப்படுமா? - அறநிலையத் துறை ஆய்வு செய்ய பக்தர்கள் எதிர்பார்ப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்தை தனி நபர்கள் பட்டா மாறுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூஜை, புனரமைப்பு உட்பட பணிகளுக்காக மன்னர்கள் முதல் பக்தர்கள் வரை நிலங்கள், ஆபரணங்களை தானமாக வழங்கி உள்ளனர். இதற்கு ஆதாரமாகச் செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், பத்திரங்கள் கோயில் நிர்வாகத்திடம் உள்ளன.

மீனாட்சி கோயிலும், அதன் உப கோயில்களும் 1937 முதல் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகிறது. இக்கோயில்கள் மூலமாக அறநிலையத் துறை ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் பெறுகிறது.

மதுரை மற்றும் வெளி மாவட்டங்களில் கோயிலுக்கு பல ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. அதுமட்டுமன்றி, கோயி லுக்கு 630 வீடுகள், கடைகள் உள்ளன. இச்சொத்துகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படாததால், அது தொடர்பான சர்ச்சைகள் அடிக் கடி ஏற்படுகின்றன. மதுரை பொன்மேனியில் ரூ.150 கோடி மதிப்புள்ள 14 ஏக்கர் நிலம் வருவாய் அதிகாரிகள் துணையோடு தனியார் பட்டா மாறுதல் செய் திருப்பது பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டா மாறுதலுக்கு துணை போன வருவாய் அதிகாரிகள், தனி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆட் சியருக்கு கோயில் நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது இந்த முறைகேடு தொடர்பாக அறநிலையத் துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் பொன்மேனியில் உள்ள சொத்து போன்று மீனாட்சி கோயிலின் மற்ற சொத்து களும் தனியாரால் பட்டா மாறுதல் செய்யாமல் இருக்கவும், ஆக்கிர மிக்கப்படாமல் இருக்கவும் நட வடிக்கை எடுக்க பக்தர்கள் எதிர் பார்க்கின்றனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலைய அதிகாரிகள் கூறியதாவது: மீனாட்சியம்மன் கோயில் சொத்துகளுக்கு அழிக்க முடியாத ஆதாரங்கள், பத்திரங்கள் உள்ளன. பட்டா மாறுதல் செய்தாலும், அந்த நிலம் அவர்களுக்குச் சொந்த மானதாக மாறிவிடாது. அந்த நிலத்தை மீட்க நீதிமன்றத்தை அணுக வேண்டியதிருக்கும்.

அண்மையில்கூட 1920-ல் தனியாரால் அபகரிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்தை 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டோம். மாதம்தோறும் சொத்து விவரங்களை ஆய்வு செய்கிறோம். அப்போதுதான் பொன்மேனியில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான ரூ.150 கோடி சொத்து தனியார் பெயரில் பட்டா மாறுதல் செய்யப் பட்டுள்ளதைக் கண்டுபிடித்தோம். இது குறித்து புகார் செய்துள்ளோம். ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x