

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகா தாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நிபா வைரஸ் என்பது வவ்வால் கடித்த பழங்கள் மூலமாக வைரஸ் மனிதனுக்கு பரவுகிறது. எனவே, பொதுமக்கள் பழங்களை நன்றாக கழுவிய பிறகு சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டுமென பொது சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து வலியுறுத்து கிறோம். கேரளாவில் இந்த வைரஸ் பரவி வரு வதால் தமிழகத்தில் சுகாதாரத்துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு எச்சரிக்கை விடுத்து சோதனை பணிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்கவும் அறி வுறுத்தி உள்ளோம். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் போன்ற எல்லையோர பகுதிகளில் கூடுதல் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் தீவிர கண்காணிப்புக்கு தயார்படுத்தி உள்ளோம்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் இருந்து வருவோரிடமும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்டவை நிபா வைரஸ் அறிகுறியாக இருக்கிறது. மேலும், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை யால் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 104 என்ற எண்ணில் மக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள ஆலோசனை பெறலாம்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுபாடுகள் இல்லை. மேலும், ரத்தம் தட்டுபாடும் இல்லை. ரத்த வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன. நீட் தேர்வு வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் மன அழுத்ததுக்கு ஆளாகக் கூடாது. எந்த தேர்வாக இருந்தாலும் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க கூடாது, தன்னம்பிக்கையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.