Last Updated : 05 Jun, 2019 12:17 PM

 

Published : 05 Jun 2019 12:17 PM
Last Updated : 05 Jun 2019 12:17 PM

திருச்சி மாநகராட்சி சார்பில் இன்று 25,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்: நிகழாண்டிலாவது நோக்கம் நிறைவேறுமா?

திருச்சி மாநகரை பசுமையாக்கும் நோக்கில், நிகழாண்டு சுற்றுச்சூழல் தினத்தில் திருச்சி மாநகரப் பகுதியில் 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்கும் திட்டத்தை மாநகராட்சி இன்று (ஜூன் 5) தொடங்குகிறது. நிகழாண்டிலாவது இந்தத் திட்டத்தில் இலக்கு, நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருச்சி மாநகரில் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பேணும் வகையில் குப்பையை வீடுதோறும் தரம் பிரித்து பெறுதல், மக்கும் குப்பையில் இருந்து நுண்உரம் தயாரித்தல், சாலையோரங்களில் பூங்கா, உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய பூங்கா அமைத்தல், நடைபயிற்சியின்போது பிளாஸ்டிக் குப்பையை அகற்றுதல், நகரை பசுமையாக மாற்ற புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல், வீட்டிலேயே நுண்உரம் தயாரித்தல் என பல்வேறு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், கடந்தாண்டு சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி மாநகரில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு வார்டுகளிலும் குடியிருப்பு நலச் சங்கங்களின் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால், முறையாக பரா மரிக்கப்படாததாலும், மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப் படாததாலும், பெரும்பாலான மரக்கன்றுகள் கருகிவிட்டன. இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கியது.

இந்நிலையில், நிகழாண்டு 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாநகராட்சி நிர்வா கம் இன்று தொடங்க உள்ளது. நிகழாண்டிலாவது மரக்கன்று நடும் திட்டத்தை முழு ஈடுபாட்டுடன் செயல் படுத்தி, மாநகரை உண்மையாகவே பசுமை நகரமாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியது: மாநகராட்சி நிர்வாகம் கடந்தாண்டு தொடங்கிய லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. குறிப்பாக, லட்சம் மரக்கன்றுகள் நடுவது என்ற இலக்கையே எட்ட முடியவில்லை. நட்டுவைத்த மரக்கன்றுகளில் பெரும்பாலானவை தழைக்கவில்லை. மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிப் பின்மையே இதற்குக் காரணம்.

இதனால், மரக்கன்று உற்பத்தி யாளர்கள், மாநகராட்சி அலுவலர் கள், நட்டுவைத்த தொழிலாளர்களின் ஆற்றல் மட்டுமில்லாது, மாநகராட்சி நிதியும் வீணாகிவிட்டது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரு நர்சரி கார்டன்கள் இருந்தும் வெளியி டத்தில் இருந்து மரக்கன்றுகளை வாங்குவதாகத் தெரிய வருகிறது. எனவே, செலவினத்தைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி யின் நர்சரி கார்டன்களில் அதிக மரக்கன்றுகளை உற்பத்தி செய்யவும், மரக்கன்று நட்டுவைத்து வளர்க்கும் திட்டத்தில் நிகழாண்டில் நோக்கத்தை எட்டவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி வட்டாரங்களில் கேட்டபோது அவர் கள் கூறியது: மாநகராட்சியின் இரு நர்சரி கார்டன்களிலும் போதிய எண்ணிக்கையில் மரக் கன்றுகள் இல்லாததாலேயே, தொண்டு நிறுவனத்திடம் இருந்து மிகக் குறைந்த விலையில் மரக்கன்றுகளை வாங்குகிறோம். மரக்கன்றுகளைப் பாதுகாக்க இரும்புக்கம்பி கூண்டுகளும் அமைக்கப்படவுள்ளன. இரும்பு கூண்டுகளுடன் மரக்கன்றுகள் நடும் திட்டம் மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் தலா ரூ.9 லட்சம் செலவில் செயல்படுத் தப்பட உள்ளது.

நிகழாண்டில், முறையாக பராம ரித்து, வளர்க்க ஒப்புக்கொண்ட குடியிருப்புவாசிகளின் வீடுகளுக்கு அருகில் மட்டுமே மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படவுள்ளன. இவை அந்தந்த வார்டுகளைச் சேர்ந்த மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளது. அதேபோல, மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரித்து வளர்க்க விருப்பம் தெரிவிப்போரின் விவரங்களை தொடர்ந்து சேகரித்து வருகிறோம். இதன்மூலம் மாநகரை பசுமையாக்கும் திட்டத்தில் நிகழாண்டு மரக்கன்று நடுவது முதல் வளர்ப்பது வரை அனைத்து நிலையிலும் இலக்கை முழுமையாக எட்டி, நோக்கத்தையும் நிறைவேற்றுவோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x