Last Updated : 24 Jun, 2019 12:00 AM

 

Published : 24 Jun 2019 12:00 AM
Last Updated : 24 Jun 2019 12:00 AM

மக்களவைத் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து மீண்டும் பணியிட மாறுதலுக்கு ஆயத்தமாகும் காவல்துறை அதிகாரிகள்

மக்களவை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, மீண்டும் பணியிட மாறுதலுக்கு காவல்துறை அதிகாரி கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் நடுநிலையுடன் செயல் பட வேண்டும் என்பதற்காக, தற் போது பணிபுரியும் இடத்தில் இருந்து காவல் துணை கண் காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கட்டாயமாக வேறு மாவட்டம், சரகம், சிறப்புப் பிரிவுகள் போன்ற வற்றுக்கு பணியிடம் மாற்றப்படுவர்.

சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது, மாவட்ட காவல்துறையில் 25-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற் பட்ட டிஎஸ்பிக்கள், மாநகர காவல் துறையில் 20-க்கும் மேற்பட்ட இன்ஸ் பெக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள் வேறு மாவட்டங் களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். மாநகர, மாவட்ட காவல்துறை இரண்டிலும் சேர்த்து 25-க்கும் மேற்பட்ட எஸ்.ஐ-க்களும் பணியிடம் மாற்றப்பட்டனர்.

தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் பணியிட மாற்றத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதன் முன்னோட்டமாக, இரு தினங்களுக்கு முன்னர் 17 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றத்துக்கான உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் வெவ்வேறு மாவட்டங் களுக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டாலும், பல்வேறு நடைமுறை காரணங்களால் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட மாவட்டத்தில்தான் தொடர்ந்து வசிக்கின்றனர். சிலர் மட்டுமே இதில் விதிவிலக்காக உள்ளனர். டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போன்றோர் தொடர்ந்து ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றாமல், காவல்நிலையங்களை மாற்றியும், உட்கோட்டங்களை மாற்றியும், சிறப்புப் பிரிவுகளுக்கு சென்றும் ஒரே மாவட்டத்துக்குள் பல ஆண்டுகள் பணிபுரிகின்றனர்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வேறு வழியில்லாமல் வெளி மாவட்டத் துக்கு செல்கின்றனர். தேர்தல் முடிந்தவுடன் பழையபடி முன்பு பணியாற்றிய மாவட்டத்துக்கே வந்துவிடுகின்றனர். அதன்படி, கோவையில் இருந்து வெளியிடங் களுக்கு மாற்றப்பட்டவர்கள், மீண்டும் கோவையில் பணியிடம் பெற மாவட்ட, மாநகர காவல்துறை நிர்வாகங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர்.

அதேபோல், கோவையில் பணி புரியும் சிலரும், தங்களது பழைய இடத்துக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். மாவட்ட, மாநகர காவல்துறையில் தலா 20-க்கும் மேற் பட்ட அதிகாரிகள் விண்ணப்பித் துள்ளதாக தெரியவந்துள்ளது' என்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுஜித்குமார் கூறும் போது, ‘கோவை மாவட்ட காவல்துறை யில் இருந்து வெளி மாவட்டத்துக்கு செல்ல, குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், சிலர் கோவையின் காலச்சூழல் பிடித்துவிட்டதால், வெளியிடத்துக்கு செல்ல விருப்பமில்லை. கோவையிலேயே தொடர்ந்து பணியாற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்' என்றார்.

மாநகர காவல்துறை அதிகாரி கள் கூறும்போது, ‘மாநகர காவல் துறையில் இருந்து வெளியிடத்துக் கும், வெளியிடத்தில் இருந்து கோவை மாநகர காவல்துறைக்கும் பணியிடம் மாறுதல் கேட்டு இன்ஸ் பெக்டர்கள், எஸ்.ஐ.-க்கள் விண் ணப்பித்து வருகின்றனர்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x