Published : 06 Jun 2019 01:54 PM
Last Updated : 06 Jun 2019 01:54 PM

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி

திருப்பூரில் 2-வது நாளாக நேற்று பெய்த கன மழையால், முருங்கப்பாளையம் ராஜம்மாள் லே-அவுட் பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருப்பூர் மாநகர் அவிநாசி சாலையை ஒட்டி, முருங்கப்பாளை யம் குடியிருப்புப் பகுதியில் ராஜம் மாள் லே-அவுட் அமைந்துள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி உள்ளது. ஆனால், பிரதான கழிவு நீரேற்றும் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக் கிறது. இதனால், அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. இதையடுத்து, பிரதான கழிவுநீர் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு, அப்பகுதி மக்களே முயற்சி மேற்கொண்டனர். ஆனால், சரி செய்ய முடியவில்லை.

பழமையான வடிகால் குழாயின் உள்பகுதியில் பல ஆண்டுகளாக தேங்கிய கழிவுகள் இறுகி இருப்பதால், நவீன இயந்திரங்கள் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம்தான் சரி செய்ய முடியும்.

இந்நிலையில், நேற்று பெய்த மழை காரணமாக ராஜம்மாள் லே-அவுட் வீதி முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இருபுறமும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுடன் வசித்து வருவதால், நோய் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகும் சூழலும் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது.

331 மி.மீ. மழை

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி, திருப்பூர் வடக்கு - 64 மி.மீ., அவிநாசி - 64 மி.மீ., பல்லடம் - 17.50 மி.மீ., ஊத்துக்குளி - 25.20 மி.மீ., காங்கயம் - 4 மி.மீ., உடுமலை - 4.40 மி.மீ., மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் - 101 மி.மீ., திருப்பூர் தெற்கு - 51 மி.மீ என 331.10 மி.மீ. மழை பெய்துள்ளது.

அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று மாலையும் மழை பெய்தது. பருவமழை தொடங்க சில தினங்கள் தாமதமாகும் என அறிவிப்புகள் வெளி வந்த நிலையில், முன்னதாகவே இடியுடன் கூடிய கன மழை பெய்து வருவது விவசாயிகள், பொதுக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x