Published : 22 Jun 2019 02:06 PM
Last Updated : 22 Jun 2019 02:06 PM

காவல் உயர் அதிகாரிகளுக்கான 2 நாள் மனவள பயிற்சி சென்னையில் தொடக்கம்

தமிழகம் முழுதும் காவலர்களுக்கான மனவளப்பயிற்சியை நிம்ஹான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கி வருவதன் அடுத்த நிகழ்வாக எஸ்.பி அந்தஸ்த்துக்கு மேற்பட்ட காவல் அதிகாரிகளுக்கான 2 நாள் பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.

தமிழக அரசு பெங்களூரில் உள்ள “நிம்மான்ஸ்” (NIMHANS) என்றழைக்கப்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் தமிழக காவல்துறை இணைந்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவலர்களுக்கும் மன அழுத்தம் நீக்கி அவர்களின் பணித்திறனை மேம்படுத்தும் விதமாக காவலர் நிறைவாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர்  இத்திட்டத்தை நேற்று முன் தினம் துவக்கி வைத்தார். 254 காவல்துறை அதிகாரிகளும் 201 தனியார் மனநல ஆலோசகர்களும் ஆக மொத்தம் 455 நபர்களுக்கு நிம்மான்ஸ் நிறுவனத்தால் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்றுநருக்கான பயிற்சி (ToT) பெங்களூரில் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள், நவம்பர் 16 அன்று முதல் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பணியாற்றும் காவலர்களுக்கும் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் “காவலர் நிறைவாழ்வு” பயிற்சினை வழங்கி வருகிறார்கள்.

தமிழக காவல்துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களில்  இதுவரை 39,044 காவலர்களும், 41,546 காவலர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்து உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள உயரதிகாரிகளுக்கும், இப்பயிற்சியை அளிக்கும் பொருட்டு, முதற்கட்டமாக சென்னை காவல் அதிகாரிகள் விடுதியில் 2 நாள் பயிற்சி வகுப்பை

காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், துவக்கி வைத்தார்கள். மேலும், நிம்மான்ஸ் நிறுவனம் மற்றும் 50 காவலர் நிறைவாழ்வு பயிற்சி மையங்களை இணைக்கும் மெய்நிகர் அறிவுசார் வலைப்பின்னல் (Virtual Knowledge Network) சேவையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னிலையில், காவலர்நலன் கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன், காவலர் நலன் ஐஜி சேஷசாய், நிம்மான்ஸ் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சேகர், உளவியல் சமூகப்பணி ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு காவல்துறையின் மாநில மனநல ஆலோசகர் மற்றும் நிறைவாழ்வுப் பயிற்சியின் ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x