Published : 24 Jun 2019 08:13 AM
Last Updated : 24 Jun 2019 08:13 AM

மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமே சுவரம் வரை சுமார் 600 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறு வனர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங் களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத் துக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண் டும், டெல்டா மாவட்டங்களை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப் புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் வரை சுமார் 600 கி.மீ தொலைவுக்கு நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி, மரக்காணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடலூரில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிதம்பரத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தில் எம்.பி எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், எம்.ராமச்சந்திரன், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத் தின் தலைவர் லெனின் உள்ளிட் டோரும், நாகையில் எம்எல்ஏக்கள் மதிவாணன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும், திருவாரூர் கொற் கையில் தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன், எம்எல் ஏக்கள் பூண்டி கலைவாணன், ஆட லரசன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட் டோரும், புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் எம்எல்ஏக்கள் பெரி யண்ணன் அரசு, ரகுபதி உள் ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மேலும், மனித சங்கிலியில் தி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் பங்கேற்று, மத்திய- மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

தவிர்க்க முடியாத காரணங் களால் புதுச்சேரியில் மனித சங் கிலி போராட்டம் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் விரைவில் கலந் தாலோசித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ஏ.நமச்சிவாயம் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x