Published : 12 Jun 2019 11:04 AM
Last Updated : 12 Jun 2019 11:04 AM

முதல்வருக்காக காத்திருக்கும் மடிக்கணினிகள்: திருட்டு பயத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடக்கி வைக்காததால் இரவுக் காவலர்கள் இல்லாத பள்ளிகளில் மடிக்கணினிகள் திருடு போகும் அச்சத்தில் தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.

அரசுப் பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இதில் 2017-18, 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளுக்குரிய பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த மாணவர்களுக்கான மடிக்கணினிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மடிக்கணினிகளைப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். இரவுக் காவலர்கள் இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சொந்த பணத்தில் காவலர்களை நியமித்து கண்காணிக்கின்றனர்.இது குறித்து ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் 3 ஆண்டு களைச் சேர்ந்த 58 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வந்துள்ளன. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இதுவரை தொடக்கி வைக்கவில்லை. தலைமை ஆசிரியர் வசம் மடிக்க ணினிகள் ஒப்படைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டன.

இவை திருடுபோனால் தலை மை ஆசிரியர் பொறுப் பேற்கவும், அதற்கான பணத்தை செலுத்தவும் வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இத னால், இரவுக் காவலர்கள் இல்லாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தில் காவலர்களை நியமித்தாலும், திருட்டு பயத்தில் உள்ளனர். மேலும் மாணவர்களுக்கு தாம தமின்றி மடிக்கணினிகளை வழங்க முதல்வர் முன்வர வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x