மதுரையில் ரயில்பெட்டி வடிவில் பள்ளிக்கூட கட்டிடம்: வசீகரிக்கும் தோற்றத்தால் மாணவர்கள்,பெற்றோர் மகிழ்ச்சி

மதுரையில் ரயில்பெட்டி வடிவில் பள்ளிக்கூட கட்டிடம்: வசீகரிக்கும் தோற்றத்தால் மாணவர்கள்,பெற்றோர் மகிழ்ச்சி
Updated on
1 min read

மதுரையில் ரயில் வடிவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூட கட்டிடத்தின் தோற்றம் அப்பகுதி மாணவர்கள், பெற்றோரை வசீகரிக்கும் வகையில் உள்ளது.

மழலையர் வகுப்புகள்தான் இப்படி கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடம் வெறும் செங்கல் மணல் கொண்ட கட்டிடமாக மட்டுமல்ல மாணவர்களின் மனம் கவரும் தோற்றத்துடன் இருந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் அமைந்துள்ளது மதுரை அரசு உதவி பெறும் ஒரு பள்ளியின் கட்டிடம்.

மதுரை ரயில் சந்திப்பு அருகே பிரபலமான மீனாட்சி பஜார் உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அதே பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது.

மதுரை கல்லூரி  மேல்நிலைப்பள்ளி. இந்த வளாகத்திற்குள்ளேயே தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியின் வடிவமைப்புதான் ரயில் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னை செல்லும் ரயில் என முகப்பிலும் எழுதப்பட்டுள்ளது.

இதனால், இங்கு இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுவரை இப்பள்ளி மாணவர்கள் அருகிலிருந்து தண்டவாளத்தில் ஓடும் ரயிலின் சத்தத்தை மட்டுமே கேட்டிருப்பார்கள். இனி இவர்கள் அவ்வப்போது ரயிலில் பயணிப்பதுபோன்ற உணர்வை ரயில் சத்தத்துடன் ஒப்பிட்டு அனுபவிக்க இயலும்.

மழலையர் வகுப்புகளுக்காக பள்ளி நிர்வாகம் செய்துள்ள இந்த முயற்சிக்கு வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in