

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் இன்று திறக்கப்படுகிறது.
திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராயபுரம் ஆஎஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த 4 அம்மா உணவகங்களையும் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்க இருக்கிறார்.
திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று திறந்து வைக்கிறார். அதன்பின் பொதுமக்களுக்கு உணவுகளை வழங்க உள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வர இருப்பதால், அந்த மருத்துவமனையில் பாது காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.