

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "சிறிய வயதிலேயே, கர்நாடக இசையில், எவரும் பயன்படுத்தாத, மேற்கத்திய இசைக்கருவியான மாண்டலினில், தன் வித்தகத்தை காட்டி வியக்க வைத்தவர் ஸ்ரீநிவாஸ்.
இளம் வயதிலேயே, தன் திறமையால் மாபெரும் இசைப் பேரறிஞர்கள் மிக்க கர்நாடக இசை சாம்ராஜ்ஜியத்தை, தம் வசம் ஈர்த்தவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை நம்பிட இயலவில்லை.
அவரது இழப்பு, மாற்று ஏதுமில்லா மனச்சுமையை அளிக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் இசைக்கு ஆற்றிய தொண்டும், மீட்டிய இசையும், காற்றுள்ளவரை இறவாப்புகழுடன் இருக்கும். அவர் ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.