Published : 13 Mar 2018 10:03 AM
Last Updated : 13 Mar 2018 10:03 AM

சின்னமலை - டிஎம்எஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: 2 மாதங்களில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தகவல்

சின்னமலை - டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

சென்னை சென்ட்ரல்-எழும்பூர் - நேரு பூங்கா இடையே பணிகள் நிறைவடைந்து, கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே, சின்னமலை - டிஎம்எஸ் இடையே 4 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அதிகாரிகள் சைதாப்பேட்டை, டிஎம்எஸ், நந்தனம், தேனாம்பேட்டை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். ரயில்பாதை மற்றும் சிக்னல்கள், காற்றோட்டம், அடிப்படை வசதிகள் குறித் தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: ‘‘அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடக்கின்றன. பணிகள் முடிக்கப்பட்ட சின்னமலை - டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

மெட்ரோ ரயிலை இயக்கி ஆய்வு செய்தோம். இதைத் தொடர்ந்து அடுத்த 2 மாதங்களுக்கு மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடத்துவோம்.

அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி ஒப்புதல் அளிப்பார். எனவே, அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் இந்தத் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x