ரெட்டேரி, வில்லிவாக்கம் பகுதிகளில் மேம்பாலம், சுரங்கப்பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ரெட்டேரி, வில்லிவாக்கம் பகுதிகளில் மேம்பாலம், சுரங்கப்பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
Updated on
1 min read

திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் தனது தொகுதியான கொளத் தூரில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். கொளத்தூர் ரெட்டேரி நூறடி சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்காக திமுக ஆட்சியில் சுமார் ரூ. 45 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் திட்டம் அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மூன்றாண்டுகால அதிமுக ஆட்சியில் இப்பணிகளை தொடங்க, எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை.

அதேபோல வில்லிவாக்கத்தில் ரயில்வே கேட் அருகே சுரங்கப் பாதை அமைக்கவும் திமுக ஆட்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்டப் பணிகளும் தொடங்கப்பட்டன. அந்தப் பணியும் கடந்த 3 ஆண்டுகளாக அதிமுக மாநகராட்சி நிர்வாகத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்ற மாநில அரசும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து, ரெட்டேரி நூறடி சாலை மேம்பாலம் மற்றும் வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in