

புதுச்சேரியில் நடைபெறும் தொடர் போராட்டங்களை அடுத்து சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ரங்க சாமி நேற்று ஆலோசனை நடத்தி னார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் அதிமுக சார்பாக தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. கடை அடைப்பு மற்றும் பேருந்து கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற் பட்டது. இதற்கிடையே, ஜெய லலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்துமாறு அதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும், நேற்று காலை அதிமுக சார்பாக ரயில் மறியல் மற்றும் உண்ணவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் பாதுகாப்பு தொடர்பாகவும் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. சட்டப்பேரவை வளாகத் தில் நடைபெற்ற இந்த கூட்டத் துக்கு முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத் தில் போலீஸ் ஐஜி பிரவீர் ரஞ்சன், டிஐஜி கண்ணன் ஜெகதீசன், சீனியர் எஸ்பி ஓம்வீர்சிங், எஸ்பிக் கள் ரவிக்குமார், பைரவசாமி, தெய்வ சிகாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, அதிமுகவினர் நடத்தும் போராட்டங்களால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழக்கம்போல பேருந்துகளை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு, காவல்துறை தலைமை யகத்தில் உயர் போலீஸ் அதிகாரி களுடன் தனியாக ஐஜி பிரவீர் ரஞ்சன் ஆலோசனை நடத்தி சில அறிவுரைகளை வழங்கினார்.