Published : 27 Mar 2018 10:25 AM
Last Updated : 27 Mar 2018 10:25 AM

மருத்துவ மேற்படிப்புக்கு அடுத்த வாரம்தரவரிசை பட்டியல்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு, பட்டயமேற்படிப்பு (டிப்ளமோ) மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பு (எம்டிஎஸ்) ஆகிய இடங்களுக்கு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக் கம் செய்வது நேற்று முன்தினம்முடிவடைந்தது.

நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பது நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. அடுத்த வாரம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x