குரங்கணி தீ விபத்து: மதுரை அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை

குரங்கணி தீ விபத்து: மதுரை அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை
Updated on
1 min read

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி படுகாயமடைந்தவர்களில் 8 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 9 பேர் பலியாகினர். இவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 6 பேர். ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் 3 பேர்.

8 பேருக்கு தீவிர சிகிச்சை:

அணுவித்யா, கண்ணன், நிஷா, தேவி, திவ்யா, கேரளாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, மீனா, தஞ்சையைச் சேர்ந்த சாய் வசுமதி ஆகியோருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுதவிர சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா, பார்கவி, திவ்ய பிரக்ருதி ஆகியோர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர், திருப்பூரைச் சேர்ந்த இருவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விவரம் அறிய 9445000586, 9994793321  என்ற தகவல் மைய என்னை தொடர்பு கொள்ளலாம்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in