

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டு, லட்சக்கணக்கானோர் வாழ் வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் - ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜம்மு-காஷ்மீர் வெள்ள சேதம் குறித்து பத்திரிகை களில் வந்த செய்தியை ஆசிரியர் கள் தெரிவித்தனர். அம்மாநிலத் தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோள் குறித்தும் விளக்கினர்.
இதைப் புரிந்துகொண்ட ஏழை, எளிய மாணவ, மாணவி யர் மதிய உணவுடன் ஊறுகாய் வாங்குவதற்கு வீட்டில் பெற்றோர் தரும் பணத்தையும், மிட்டாய் வாங்கி சாப்பிடத் தரும் காசு களையும் நிவாரண நிதிக்கு கொடுப்பதாக தெரிவித்தனர்.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர், சிறுமிகள் தங்களிடமிருந்த 50 பைசா, 1 ரூபாய் என 405 ரூபாய் சேர்த்து ஆசிரியரிடம் கொடுத்தனர்.
அப்பணத்தை ஆசிரியர்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள சேவை வாயிலாக வியாழக்கிழமை அனுப்பி வைத்தனர்.