Last Updated : 27 Sep, 2014 12:37 PM

 

Published : 27 Sep 2014 12:37 PM
Last Updated : 27 Sep 2014 12:37 PM

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு: தமிழக - கர்நாடக எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு

18 ஆண்டுகளாக நடந்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தமிழக-கர்நாடக எல்லையில் இரு மாநில போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்திப்பள்ளியில், கர்நாடக போலீஸார் 1000-க்கும் மேற்பட்டோரும், தமிழக போலீஸார் 500 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. அதிமுக கொடி ஏந்திய கார்கள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

அவ்வாறாக 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பிவிடப்பட்டுள்ளன. வாகனங்களை அனுமதிக்காத கர்நாடக போலீஸாருடன் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருமாநில எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

| படிக்க - >நிகழ்நேரப் பதிவு: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x