Published : 18 Sep 2014 08:32 AM
Last Updated : 18 Sep 2014 08:32 AM

மாணவிகள் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது: தந்தையே அழைத்து வந்து எஸ்.பி-யிடம் ஒப்படைத்தார்

மதுரையில் மாணவிகள் மீது ஆசிட் வீசிய மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் சிக்கினார். அவரது தந்தையே அழைத்து வந்து எஸ்பி-யிடம் ஒப்படைத்துள்ளார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள சின்னபூலாம்பட்டி யைச் சேர்ந்த மீனா (17), அங்காள ஈஸ்வரி (18) இருவரும் திரு மங்கலம் கல்லூரியில் பி.ஏ படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக் கிழமை வகுப்புகள் முடிந்து திரு மங்கலம் பஸ் நிலையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத நபர் இவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பினார்.

இதில் காயமடைந்த மீனா, அங்காள ஈஸ்வரிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குற்றவாளி யைக் கண்டறிய எஸ்பி விஜயேந்திர பிதரி மேற்பார்வையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. 5 நாட்களாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறினர். இதைத் தொடர்ந்து குற்றவாளி போன்று தோற்றமுடைய 3 படங்களை கிராபிக்ஸ் மூலம் போலீஸார் வரைந்தனர். ஆனால், அந்த படங்கள் குற்றவாளியின் முகத் துடன் ஒத்துப்போகவில்லை என மாணவிகள் தெரிவித்தனர்.

எதிர்பாராத திருப்பம்

இந்நிலையில், திருமங்கலம் விடத்தகுளம் சாலையில் உள்ள ஆறுமுகம் ரோட்டில் வசிக்கும் சுதாகர் என்பவர் புதன் கிழமை மதியம் தனது மகன் சங்கர நாராயணனை(24) அழைத்துக் கொண்டு மதுரை எஸ்பி அலுவல கத்துக்கு வந்தார். அப்போது ‘மாணவிகள் மீது ஆசிட் வீசியது, மனநலம் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன்தான்’ எனக்கூறி எஸ்பி விஜயேந்திரபிதாரியிடம் சங்கர நாராயணனை ஒப்படைத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரை சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில் உள்ள மார்க்கெட்டில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் சுதாகர். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த மகன் சங்கரநாராயணுக்கு 3 ஆண்டுகளாக மனநலம் சரியில்லை. இரு ஆண்டுகளுக்கு முன் திருமங்கலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணை கத்தியால் குத்த முயன்றபோது போலீஸார் சங்கரநாராயணனைக் கைது செய்தனர். ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்ததால், நீதிமன்ற உத்தர வின்படி அவரை விடுதலை செய்து விட்டனர். அதன்பின் வீட்டின் கண்காணிப்பிலேயே இருந்த சங்கரநாராயணனை கடந்த 4 நாட்களாக திடீரென காணவில்லை.

சிக்கியது எப்படி?

இந்நிலையில் புதன்கிழமை காலை சங்கரநாராயணன் தனது வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது கைகளில் காயம் ஏற்பட்டிருந்தது. இதைக் கண்ட சுதாகர் அதுபற்றி விசாரித்தபோது முதலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து விசாரித்ததால், மாணவிகள் மீது ஆசிட் வீசும்போது தனது கைகளி லும் தெறித்துவிட்டதாக கூறிய சங்கரநாராயணன், கடந்த 4 நாட் களாக ரயில் நிலையம், பாழடைந்த கட்டிடங்கள் என பல இடங்களில் மறைந்து திரிந்ததாக தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுதாகர் வாடகைக்கு கார் மூலம் சங்கரநாராயணனை அழைத்து வந்து எஸ்பி-யிடம் ஒப்படைத் துள்ளார்.

பெண்கள் மீது வெறுப்பு

முதற்கட்ட விசாரணையில் திருமங்கலத்தில் உள்ள இரும்புக் கடையில் ஆசிட்டை வாங்கிய தாக சங்கரநாராயணன் கூறியுள்ளார். ’அவர் முழுவதுமாக மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தெரியவில்லை. சில சமயங்களில் மட்டுமே மாறி மாறி பேசுகிறார். எனவே வியாழக்கிழமை அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளோம். மேலும் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசு வழக்கறிஞர்களிடம் கலந்து பேசி வருகிறோம். இதுவரை கிடைத்த தகவல்களின்படி பார்த் தால், சங்கரநாராயணனுக்கு பெண் கள் மீது ஏதோ ஒரு வகையிலான வெறுப்பு அதிகம் இருப்பதை உணர முடிகிறது. அது காதல் தோல்வி யால் வந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை முடிவில் தெரிந்துவிடும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x