

திமுக தலைவர் மு . கருணாநிதி அவரது கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி அரசியல், எழுத்துப்பணி, திரைத்துறை என அனைத்து துறைகளிலும் தடம்பதித்தவர். தற்போது வயது முதிர்வு மற்றும் உடல்நல காரணங்களால் தீவிர அரசியலலிருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார்.
அரசியல் தலைவர்கள், திரையுலகக் கலைஞர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் அவ்வப்போது கருணாநிதியை சந்திந்து வருகின்றனர்.
மு. கருணாநிதி நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கிறார் என்பதை கட்சித் தொண்டர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் உணர்த்தும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களும், வீடியோக்களும் வெளி வந்தவண்ணம் உள்ளன.
அந்தவகையில் கருணாநிதி அவரது கொள்ளுப் பேரன் மகிழனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.